அழகைக் கெடுக்கும் முகப்பருவில் இருந்து விடுதலை தரும் சிம்பிள் வீட்டு வைத்தியம்!

Malathi Tamilselvan
Jan 25,2024
';

முகப்பரு

அழகை பரமரிக்க அனைவரும் விரும்புவது இயல்புதான், ஆனால், சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள், அழகை குறைத்துவிடுகிறது. அதிலும் முகத்தில் ஏற்படும் பருக்கள் அழகுக்கு திருஷ்டியாக மாறிவிடுகிறது

';

முக அழகு

பண்டிகை, கொண்டாட்டம், திருவிழா, வீட்டில் விசேஷம் என அழகாக இருக்க விரும்பும் பல சந்தர்ப்பங்களில், முகப்பரு மிகவும் கவலையைக் கொடுக்கிறது

';

சிகிச்சை

முகப்பருவை அகற்றவும் அதை குறைக்கவும் பல பயனுள்ள வீட்டு சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்

';

ஐஸ் தெரபி

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சேதம் மற்றும் வீக்கத்தை ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி குறைக்கலாம். ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, முகப்பரு பாதிப்பு உள்ள இடத்தில் தடவவும்

';

டீ ட்ரீ ஆயில்

பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் கொண்ட இந்த எண்ணெய் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. பருத்தி துணியில் டீ ட்ரீ எண்ணெயை தொட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். இந்த எண்ணெயை வேறு ஏதேனும் ஒரு எண்ணெயுடன் கலந்து தான் பயன்படுத்த வேண்டும். டீ ட்ரீ ஆயிலை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தினால் எரிச்சல் ஏற்படும்

';

ஆப்பிள் சைடர் வினிகர்

மூன்று பங்கு தண்ணீரில் ஒரு பங்கு ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து அதில் பருத்தியை தோய்த்து பரு இருக்கும் பகுதியில் தடவவும். ஆப்பிள் சைடர் வினிகர் சருமத்தின் pH அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு குணங்களைக் கொண்ட இந்த எண்ணெய் பருக்களை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது

';

மஞ்சள்

பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் கொண்ட மஞ்சள் தூளை தேன் அல்லது தண்ணீருடன் கலந்து அந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தவும். 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு முகத்தை கழுவிவிட்டால், முகத்தில் உள்ள பருக்கள் குறையும்

';

கற்றாழை

அழற்சி எதிர்ப்பு குணங்கள் கொண்ட கற்றாழை, முகப்பரு தொடர்பான பிரச்சனைகளையும் வீக்கத்தையும் குறைக்க உதவும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தமான கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்திய 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story