உடலில் இரத்த ஓட்டம் உட்பட மூளை சரியாக செயல்பட என அனைத்து செயல்பாடுகளுக்கும் நரம்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம். நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் உணவுகள் இவை
உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு கொண்ட பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன
நரம்பை வலுப்படுத்த தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது பாதாம். இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் பாதாம் பருப்பில் உள்ளது. கால்சியம் அதிகம் உள்ளதால் இது நரம்பு மண்டலத்தை மட்டுமல்ல, எலும்பு மண்டலத்தையும் பாதுகாக்கும்
உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. நரம்பு பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மெக்னீஷியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் என பல வைட்டமின்கள், தாது உப்புகள் கொண்ட செவ்வாழைப்பழம் நரம்புகளை பலப்படுத்தும்
கருப்பு திராட்சையை உலர வைக்கும்போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு கூடுகிறது. இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கும் இது இரும்புச்சத்து நிறைந்தது, நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டது
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தும் வெண்டைக்காய் நரம்பு மண்டலத்தை வலுவூட்டி மூளையை சீராக செயல்பட வைக்கிறது
நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் அருமருந்து. சின்ன வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நரம்பு தளர்ச்சி குணமாகும்
அனைவருக்கும் அவசியமான உணவுப் பொருட்களின் பட்டியலில் முக்கியமானது பால். வைட்டமின் பி12 கொண்ட பால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை