';

நரம்புமண்டலத்தை வலுப்படுத்தி மூளையை செயல்பட வைக்கும் உணவுகள்

​​உடலில் இரத்த ஓட்டம் உட்பட மூளை சரியாக செயல்பட என அனைத்து செயல்பாடுகளுக்கும் நரம்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம். நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் உணவுகள் இவை

';

பிஸ்தா

உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு கொண்ட பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன

';

பாதாம்

நரம்பை வலுப்படுத்த தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது பாதாம். இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் பாதாம் பருப்பில் உள்ளது. கால்சியம் அதிகம் உள்ளதால் இது நரம்பு மண்டலத்தை மட்டுமல்ல, எலும்பு மண்டலத்தையும் பாதுகாக்கும்

';

வைட்டமின் பி

உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. நரம்பு பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

';

செவ்வாழை

மெக்னீஷியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் என பல வைட்டமின்கள், தாது உப்புகள் கொண்ட செவ்வாழைப்பழம் நரம்புகளை பலப்படுத்தும்

';

உலர் திராட்சை

கருப்பு திராட்சையை உலர வைக்கும்போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு கூடுகிறது. இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கும் இது இரும்புச்சத்து நிறைந்தது, நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டது

';

வெண்டைக்காய்

மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தும் வெண்டைக்காய் நரம்பு மண்டலத்தை வலுவூட்டி மூளையை சீராக செயல்பட வைக்கிறது

';

சின்ன வெங்காயம்

நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் அருமருந்து. சின்ன வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நரம்பு தளர்ச்சி குணமாகும்

';

பால்

அனைவருக்கும் அவசியமான உணவுப் பொருட்களின் பட்டியலில் முக்கியமானது பால். வைட்டமின் பி12 கொண்ட பால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story