பலர் எல்லாவிதமான உணவுகளையும் குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். ஆனால் சில உணவுகளையும், உணவுப்பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்
கண்ணாடி பாட்டிலில் சேமிக்கப்படும் போது நீண்ட நாள் நன்றாக இருக்கும் உலர்ந்த பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் அவற்றை மேலும் வறண்டுபோக செய்கிறது. எனவே, உலர் பழங்கள் வீணாகத் தொடங்குகின்றன. மேலும் சுவை மற்றும் மிருதுவான தன்மையும் வீணாகும்.
ஃபிரிட்ஜில் வைப்பதால், அவை நீண்ட நாள் அப்படியே இருக்காது. அவற்றின் நறுமணம் மற்றும் சுவையும் குறைந்துவிடும்
வாசனை, சுவை மற்றும் ஒட்டுமொத்த தரத்தை தக்கவைக்க அறை வெப்பநிலையில் காற்று புகாத கொள்கலனில் காபிப் பொடியை சேமிக்கவும். காபியை ஒட்டுமொத்தமாக வாங்கி சேமிப்பதைவிட, அவ்வப்போது வாங்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்தால் ப்ரெட் விரைவில், பூஞ்சை படிந்து கெட்டுப் போய்விடும்.
உரிக்கப்பட்ட அல்லது நறுக்கிய வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை பாக்டீரியாவை ஈர்த்து சுற்றுப்புறத்தில் உள்ள நாற்றங்களையும் கிருமிகளையும் உறிஞ்சிவிடும். நறுக்கிய வெங்காயத்தை உடனடியாக பயன்படுத்திவிட வேண்டும்
குளிர்சாதன பெட்டியில் எண்ணெயை சேமிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதன் சுவை மாறுகிறது.
குறைந்த வெப்பநிலையில் குங்குமப்பூ சேமித்து வைக்கக்கூடாது. குங்குமப்பூ இழைகள் உலர்ந்திருப்பதை உறுதிசெய்து அவற்றை கவனமாக சேமிக்கவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை