ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரி பழங்களில் கல்லீரலை நச்சுத்தன்மையாக்குகிறது மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
மீன் உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி அதிகப்படியான கொழுப்பையும் கழிவுகளையும் வெளியேற்ற உதவி செய்யும்.
அவகேடோ பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளன. இது கல்லீரல் பாதிப்பை குறைக்கும் வேதிப்பொருள்களை கொண்டிருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.
பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகளில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், கல்லீரலில் கெட்டக் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன.
கிரேக்க தயிரில் புரோபயாடிக்குகள் அதிகம், இது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின் உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். கல்லீரலைச் சுற்றி படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும் முடியும்.
கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கல்லீரலில் தேங்கும் கொழுப்பு மற்றும் கழிவுகளை வெளியேற்ற பிளாக் காபி உதவி செய்யும்.