நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் இயற்கை பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சை சாறு உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை அளிக்கின்றது. இதில் இஞ்சி சேர்த்து குடிப்பது இன்னும் அதிக நன்மைகளை அளிக்கும்.
மஞ்சள் நீரில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பல பண்புகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
நெல்லிக்காயில் ஆண்டிஆக்சிடெண்டுகள், வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
கற்றாழை சாறில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன. இதை மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு உட்கொள்ளலாம்.
வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக உள்ளது. இதை இரவில் ஊற வைத்து காலையில் இதன் நீரை உட்கொள்ளலாம்.
தினமும் காலை நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாற்றை குடித்தால் உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.