மாரடைப்பு வரும் முன் இந்த அறிகுறிகள் தோன்றும்... உஷாரா இருங்க

';

இதய பிரச்சனை

இன்றைய அவசர உலகில் பலர் இதய பிரச்சனைகளால் அவதிப்படுவதை நாம் பார்க்கிறோம். இதற்கான முக்கியமான காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

';

இதயம்

துவக்கத்திலேயே இதயத்தில் உள்ள பாதிப்புகளை பற்றி தெரிந்து விட்டால் சரியான நேரத்தில் இதற்கான சிகிச்சை அளித்து ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

';

இதய நோயாளிகள்

இதய நோயாளிகள் இறப்பதற்கு முக்கியமான காரணம் இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தான். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால் இதய அடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

';

பதற்றம்

திடீரென இருக்கம், பதற்றம், சோர்வு ஆகியவை அதிகமாவது இதய அடைப்பின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். இப்படி நடந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

';

இதய அடைப்பு

இதய அடைப்பு ஏற்பட்டால் மார்பகத்தின் இடது புறத்தில் வலி ஏற்படும். இந்த வலி முதுகு, தோள் என பரவக்கூடும். இந்த வலியை அலட்சியம் செய்வது ஆபத்தாகலாம்.

';

மங்கலான பார்வை

சரியாக பேச முடியாமல் போவது, மங்கலான பார்வை, கை கால்களில் திடீரென குளிர்ச்சியான உணர்வு ஏற்படுவதும் இதற்கான அறிகுறிகள்.

';

தலை சுற்றல்

தலை சுற்றல், இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது, மூச்சு விடுவதில் சிரமம், அதிக வியர்வை ஆகியவையும் இதய கோளாறுக்கான அறிகுறிகள் ஆகும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story