ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி இல்லை.
ரூ 6.5 லட்சம் வரை வருமானம் உள்ள தனிநபர்கள் பங்குகளில் முதலீடு செய்தால் வரி செலுத்த தேவையில்லை.
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கான நிலையான வரி விலக்கு ரூ.40,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டது.
வங்கி மற்றும் தபால் டெபாசிட்டுகளுக்கான வட்டிக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டது.
வாடகை வருமானத்தின் மீதான டிடிஎஸ் வரம்பு ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2.4 லட்சமாக அதிகரித்துள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளுக்குள், மின்னணு முறையில் வரிக் கணக்கின் அனைத்து சரிபார்ப்பும் செய்யப்படும்.
2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் அறிவிப்பு.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதிவேக ரயில் திட்டம் தொடங்கப்படும்.
வடகிழக்கு பிராந்தியத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.58,166 கோடியாக அதிகரித்தது.