பச்சை கொத்தமல்லி சிறுநீரகத்தை சிறப்பாக சுத்தம் செய்து அதன் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
துளசி சிறுநீரக கற்களை நீக்குகிறது. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. துளசியில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் மற்றும் அசிட்டிக் அமிலம், சிறுநீரக கற்களை உடைக்கும்.
இந்த கீரையுடன் சேர்த்து, அதன் தண்டுகளையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி குடித்தால், சிறுநீரகத்துக்கு அவ்வளவும் நல்லது..
நெருஞ்சில் என்றும் அழைக்கப்படும் இந்த ஆயுர்வேத மூலிகை, சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. ஆயுர்வேதத்தின் படி சிறுநீரக பிரச்சனைகளுக்கு வீக்கம் முக்கிய காரணம். இஞ்சி வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சிறுநீரக பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. பூண்டு இரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல சிறுநீரக மூலிகையாகும்.
மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது வலுவான அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தின் படி, வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்து நன்மை பயக்கும்.