வெற்றி அடைவதற்கான 7 ரகசியங்கள்...!

';

1 . பணம்தான் உண்மையான செல்வம் என நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், நல்ல உறவுகள், நல்ல ஆரோக்கியம், சிறந்த அனுபவங்கள் போன்றவையே உண்மையான செல்வங்களாகும்.

';

2. சிறப்பான திட்டம்தான் வெற்றிக்கான வழியென கூறப்படுவது உண்டு. ஆனால், அது உண்மையல்ல. திட்டம் மட்டுமே வெற்றியைத் தராது. அந்தத் திட்டத்தை எவ்வாறு அர்த்தமுள்ள வகையில் செயல்படுத்தி, வெற்றி அடைகிறோம் என்பதே முக்கியமாகும்.

';

3. கல்வி மட்டுமே வெற்றிக்குப் போதாது. கல்வி என்பது அறிவை வளர்க்கும் ஒரு வழிமுறை மட்டும்தான். நம்முடைய சுயகற்றல், அனுபவங்கள் போன்றவைதான் வெற்றிக்கு மிகவும் அவசியமானவை ஆகும்.

';

4. Too Late, Too Old என யாரும் சொன்னால், அங்கேயே நின்றுவிடாதீர்கள். உங்களிடம் நல்ல திட்டமும் ஆர்வமும், செயல்படும் திறனும் இருக்கிறது எனில், உங்கள் வயது ஒரு தடையே இல்லை. உடனே தாமதிக்காமல் செயல்படத் தொடங்குங்கள்.

';

5. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல, நீங்கள் இணையத்தில் படித்தது, புத்தகத்தில் படித்தது உதவாது. உங்களது உண்மையான அனுபவம், பிறர் கூறக் கேட்ட கேள்வியறிவு, அனுபவ அறிவு போன்றவைதான் வெற்றிக்கு உண்டான காரணிகள்.

';

6. சிறப்பானவர்கள் மட்டுமே எளிதில் வெற்றி அடைவார்கள் என்றில்லை. நமது வெற்றியை நோக்கிய எண்ணங்கள் வித்தியாசமாகவும், கிரியேட்டிவிட்டியுடனும் இருந்தால் போதும், எளிதாக வேலையை முடித்து வெற்றியடைய முடியும்.

';

7. வெற்றியடைய நிறைய குறுக்கு வழிகள் உள்ளன. ஆனால், குறுக்கு வழியில் கிடைக்கும் வெற்றியில் கிடைக்கும் திருப்தி தற்காலிகமானது. இதில் அர்த்தம் கிடையாது. ஆனால், கடினமாக உழைத்து, தோல்வி அடைந்து, அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் வெற்றிதான் உண்மையில் சுவையானது.

';

VIEW ALL

Read Next Story