வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் உறவு யார்?

';

இந்த வாழ்க்கையில் உங்கள் கூடவே முழுவதும் பயணிக்கக்கூடிய உறவு யார் என்ற கேள்விக்கு யாரையாவது ஒருவரை யோசித்து வைத்திருப்பீர்கள்

';

அம்மா, அப்பா, மனைவி, மகன், மகள், கணவன், நண்பர்கள் என இந்த பட்டியலில் யாராவது ஒருவரின் பெயர் உங்கள் மனதில் இருக்கும்

';

உண்மையாக பார்த்தால், இந்த பட்டியலில் இருக்கும் ஒருவர் கூட உங்களுடன் வாழ்க்கை முழுவதும் வரப்போவதில்லை.

';

அப்படி என்றால் உங்களின் உண்மையான வாழ்க்கை துணை யார்? என்றால் உங்கள் உடம்பு தான்.

';

உங்கள் உடம்பு செயல்படுவதை நிறுத்திவிட்டால் உங்களுடன் யாரும் இருக்கப்போவதில்லை. பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுடன் இருக்கப் போவது உங்கள் உடம்பு தான்.

';

உங்கள் உடம்புக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உடம்பு உங்களைப் பார்த்துக் கொள்ளும்.

';

நீங்கள் என்ன உண்கிறீர்கள், என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள், எந்த அளவுக்கு உடலுக்கு ஓய்வு தருகிறீர்கள், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதையெல்லாம் பொருத்துத்தான் உங்கள் உடம்பு உங்களைப் பாதுகாக்கும்...!

';

உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்பிற்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.

';

மூச்சுப் பயிற்சி- நுரையீரல்களுக்கு, தியானப் பயிற்சி - மனதிற்கு, யோகாசன பயிற்சி - முழு உடம்பிற்கு, நடைப்பயிற்சி - இதயத்திற்கு, சிறந்த உணவு - ஜீரண உறுப்புகளுக்கு, நல்ல எண்ணங்கள் - ஆன்மாவிற்கு,

';

நற்செயல்கள் - உலகிற்கு என்பதை உணர்ந்து வாழ்க்கையை முறையை வாழ்வோம்...! வாழ்க்கை வளமாகும்...!!!

';

VIEW ALL

Read Next Story