பள்ளி மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவது எப்படி?
இப்போதைய உலகில் மாணவர்களின் கவனத்தை சிதற வைக்க பல விஷயங்கள் இருக்கின்றன
இருப்பினும் சரியாக படிப்பில் கவனம் செலுத்தி வெற்றபெற வேண்டும் என்றால் இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க
படிக்க வேண்டியவை எவை என்பது குறித்து ஒரு ஷெட்யூல் செட் செய்து கொள்ளுங்கள்
அதன்படி, உங்களுக்கு மிகவும் உகந்த இடத்தை தேர்வு செய்து அங்கு சென்று படிக்கவும்
எவ்வளவு நேரத்தில் படிக்க வேண்டும், எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை திட்டமிட்டு படிக்கவும்
உங்களுக்கு நீங்களே இந்த விஷயங்களில் சின்ன சின்ன இலக்குகளை நிர்ணயித்து அதில் வெற்றி பெறுங்கள்
25 நிமிடங்கள் இடைவிடாமல் படிக்கவும், 5 நிமிடங்கள் இடைவெளி எடுத்து உங்களை புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்ளுங்கள்
ஒருவேளை கவனச் சிதறல்கள் இருந்தால் அவற்றை அடையாளம் கண்டு அதனை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்
படிப்பதற்கு தேவையான மெட்டீரியல்கள், நோட்ஸ் உள்ளிட்டவற்றை சேகரித்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்
அதேநேரத்தில் சாப்பாடு, உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்துங்கள்
மன அமைதிக்கு தேவையான தியானம், யோகா ஆகிய பயிற்சிகளையும் திட்டமிட்டு செய்யுங்கள்
உங்களை எப்போதும் ரிலாக்ஸாகவும், ஹேப்பியாகவும் வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துங்கள்
உங்களின் படிப்பில் நிச்சயம் வெற்றி பெற்று, இலக்கையும் வெற்றிகரமாக அடைவீர்கள்