மத்திய அரசின் புதிய FASTag விதிகள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த புதிய FASTag மாற்றங்கள் அதன் செயல்திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்த செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து FASTagகளும் வாகனத்தின் பதிவு எண்களுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
புதிதாக வாகனம் வாங்கியவர்கள் 90 நாட்களுக்குப் பிறகு FASTag கணக்கில் வாகன எண்ணை புதுப்பித்து கொள்ளலாம்.
3 ஆண்டுகளுக்கு முன்பு FASTag எடுத்து இருந்தால் புதிய KYC விதிகளை பின்பற்ற வேண்டும்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு FASTag எடுத்து இருந்தால் புதிதாக மாற்ற வேண்டும்.
KYC மற்றும் பழைய FASTagகளை அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பு முடிக்க வேண்டும்.
இதனை செய்ய தவறினால் டோல் கேட்டில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.