கோமாளி படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
இவர் நடித்து, இயக்கிய லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
6 கோடியில் தயாரான இந்த படம் 100 கோடி வசூல் செய்தது.
இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு ஜாக்பார்ட் அடித்தது.
இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் மதிப்பு கோலிவுட்டில் அதிகரித்தது.
பல தயாரிப்பு நிறுவனங்கள் இவரை அணுகி அட்வான்ஸ் கொடுக்க தயாராக இருந்தனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார்.
முதலில் இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க இருந்தது.
இந்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.
தற்போது இந்த படத்தை செவன் ஸ்கீரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.