பாகிஸ்தான் சோயிப் மாலிக் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சோயிப் மாலிக் தவிர, விராட் கோலி, கீரன் பொல்லார்ட் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் அதிக ரன்களுடன் உள்ளார் கிறிஸ் கெய்ல். இவர் மொத்தமாக 14,562 ரன்கள் அடித்துள்ளார்.
அடுத்த இடத்தில் சோயிப் மாலிக் உள்ளார். இவர் மொத்தம் 13,022 ரன்கள் அடித்துள்ளார்.
சோயிப் மாலிக் 77 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில், இன்னும் சதம் கூட அடிக்கவில்லை.
மூன்றாவது இடத்தில் கீரன் பொல்லார்ட் உள்ளார். இவர் மொத்தம் 12,517 ரன்கள் அடித்துள்ளார்.
நான்காவது இடத்தில் விராட் கோலி உள்ளார். இவர் டி20 கிரிக்கெட்டில் மொத்தம் 11,994 ரன்கள் அடித்துள்ளார்.
அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளார். இவர் மொத்தம் 11,903 ரன்கள் அடித்துள்ளார்.