விராட் கோலிக்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் சர்மா.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பல ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இருப்பினும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பரவலாக பேசப்பட்டது.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் ரோஹித் சர்மா. மும்பைக்காக 5 கோப்பைகளை கொடுத்துள்ளார்.
36 வயதான ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு ரூ.220 கோடி என்று கூறப்படுகிறது.
பிசிசிஐ மூலம் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளமாக பெறுகிறார் ரோஹித் சர்மா. இதே போல விராட் கோலி, ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் சம்பளம் பெறுகின்றனர்.
ஒரு டெஸ்ட் போட்டியில் ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டியில் ரூ.6 லட்சம், டி20 போட்டியில் ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியால் இந்தியன் பிரீமியர் லீக்கில் ரூ. 16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். மேலும் பல பிராண்ட் ஒப்புதல்களின் மூலம் வருமானம் பெறுகிறார் ரோஹித் சர்மா. ஒரு ஒப்புதலுக்கு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் பெறுகிறார்.