நம் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகிப்போன இண்டர்நெட், இல்லை என்றால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலை தான் உள்ளது.
அரசாங்கம் செயல்படுவது முதல், வங்கிகள் பங்கு சந்தை, தொழில்நுட்ப நிறுவனங்கள் என மிக சிறிய அளவிலான வேலை வரை அனைத்துமே ஸ்தம்பித்து விடும்.
உலகில் ஸ்மார்ட்போன்கள் இணைய வசதிகள் இல்லாத நாடுகளே இல்லை எனலாம். ஒவ்வொரு நாட்டிலும், இண்டர்நெட் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் வெவ்வேறு விதமாக உள்ளது.
ஆனால் இண்டர்நெட் இணைப்பு வசதியை இலவசமாக கொடுக்கும் நாடு ஒன்று உலகில் உள்ளது.
ஐரோப்பாவில் உள்ள எஸ்டோனியா என்ற சிறிய நாடு, இலவசமாக இணைய வசதியை வழங்குகிறது.
இணைய வசதியை அடிப்படை உரிமையாக கருதும் எஸ்டோனியா ( Estonia), அனைத்து பள்ளிகள் கல்லூரிகளுக்கு இலவச இணையதள சேவைகளை வழங்குகிறது.
எஸ்டோனியா நாட்டில் உள்ள இணையதள வேகம் 52.6 மெகா பைட் என்ற அளவில் உள்ளது.
இணையதளம் இலவசம் என்றாலும், அந்நாட்டில் பல விஷயங்களை அணுக கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.