நெட்பிளிக்ஸ் கொடுத்த ஷாக்! இனி அவ்வளவு தான்
கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது.
உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இந்த செயலியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என சந்தா செலுத்தி கோடிக்கணக்கான பயனர்கள் படங்கள், சீரிஸ்களை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் சந்தா தொகையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட் நடிகர்களின் வேலை நிறுத்தம் முடிவடைந்த பின்னர், நெட்ஃபிளிக்ஸ் அதன் சந்தா விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், எவ்வளவு விலையை உயர்த்து என்பது பற்றி தகவல் வெளியாகிவில்லை. மேலும், புதிய விலை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய தகவலும் வெளியாகவில்லை.
இந்த விலை உயர்வு கனடா மற்றும் அமெரிக்காவிற்கு பொருந்தும் என்று தெரிகிறது. மேலும், இந்த விலை உயர்வு இந்தியாவுக்கு வருமா என்பது தெரியவில்லை.
இப்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி நெட்ஃபிளிக்ஸ் கட்டண தொகை 25 சதவீதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது.