உடல் எடை அதிகரிப்பதால் பலவித பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது பல நோய்களுக்கு நுழைவாயிலாக அமைகின்றது.
உடல் பருமனை குறைக்க ஆரோக்கியமான உணவு முறையும் வாழ்க்கை முறையும் அவசியமாகும்.
உடல் எடையை குறைக்க உதவும் சில உணவுப் பழக்கங்களைப் பற்றி இங்கே காணலாம்.
மதிய உணவில் பிரவுன் ரைஸ், கினோவா, ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை உட்கொள்வது நல்லது. இதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு வயிற்றில் நிரம்பிய உணர்வை அளிக்கும்.
புரதச்சத்தை உட்கொள்வதால் ஆற்றல் கிடைக்கிறது. புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் எடையை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற முடியும்.
கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்வது எடை இழப்பில் பெரிய அளவில் உதவும்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.