நெல்லிக்காயில் வைட்டமின்கள், நார்ச்சத்து, சோடியம், நியாசின், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், அமினோ அமிலங்கள், தையாமின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
நெல்லிக்காய் நம் உடலுக்கு தேவையான ஒரு சூப்பர்ஃபுட் எனலாம். சிறந்த டீடாக்ஸ் உணவான இது கல்லீரல், மூளையை பலப்படுத்துவதோடு, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் அற்புதமான என்றாலும், சில பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை உட்கொள்வது, அவர்களது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், ஹைப்பர் அசிடிட்டி உள்ளவர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும்
இரத்தப்போக்கு அபாயம் அதிகரிக்கலாம் என்பதால், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சில நாட்களுக்கு நெல்லிக்காயை தவிர்க்க வேண்டும்.
நெல்லிக்காய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. எனவே, இரத்தச் சர்க்கரைக் குறைவாக உள்ளவர்கள், நெல்லிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.