நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ள கிவி பழம் சுவையானது.
அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்தப் பழத்தை தினசரி சாப்பிட்டால் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டையும் அள்ளி வழங்குகிறது
அனைவரும் விரும்பி சாப்பிடும் கிவி பழத்தை தினசரி சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும்
கிவி பல நோய்களைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் சி, ஈ, கே, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல சத்துக்கள் இதில் உள்ளன. செரிமானத்தை வலுப்படுத்த இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
பலருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் அதிகம். மேலும் வலுவாக இருக்க இதை உட்கொள்ளலாம். அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் இது பெரிதும் உதவுகிறது
நோய் பாதித்தவர்கள், கிவி பழத்தை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். கிவியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உங்கள் உடலை முழுமையாக கட்டுக்கோப்பாக வைக்கிறது. கிவி டெங்குவிலிருந்து மிக விரைவாக குணமடையச் செய்யும்
முகத்தை சுத்தமாகவும் அழகாகவும் மாற்ற, தினமும் கிவி சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து குறைபாட்டை போக்க, நீங்கள் கிவி சாப்பிட வேண்டும். அதோடு, கிவிப் பழத்தோலில் உள்ள சத்துக்களை வீணடித்துவிடாமல், அதை முகத்தில் தேய்த்து ஊறவிடு கழுவினால் முகம் பளிச்சிடும்
உறங்குவதில் சிரமம் இருந்தாலும், கிவி பழம் பயன்படுத்த வேண்டும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உட்கொண்டால், கிவி பழம் ஆழ்ந்த தரமான தூக்கத்தைத் தரும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை