அவகாடோவில் வைட்டமின்கள் ஈ மற்றும் சி நிறைந்துள்ளன. இதில் பயோட்டின் காணப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் கதிரியக்க மாற்றங்களை தடுத்து சருமத்தை புத்துணர்வுடன் வைக்க உதவுகிறது.
பப்பாளி சருமத்தில் இறந்த செல் அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது. மேலும் சருமத்தில் ஆழமாக இருக்கும் முகப்பருக்கள் மற்றும் கருமைகள் நீங்கி பளப்பளப்பாக வைக்க உதவுகிறது.
மாதுளை சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை பிரகாசமாகவும், முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
பெர்ரிகள் சருமம் பாதுகாப்பு சேர்மங்களின் நிலையானத் தன்மையைக் கொண்டுள்ளது. முகத்தின் சுருக்கம், வயதானத் தோற்றம், கரும் புள்ளிகள் நீங்கி சருமத்தை இளமையாகவும் பிரகாசமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.
வாழைப்பழத்தில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி காணப்படுகின்றன. இவை ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத் தோற்றத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்
தர்பூசணியில் உள்ள நீர் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி நிறைந்துள்ளன. இது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், வைத்திருக்க உதவுகின்றன.
வெள்ளரிக்காய் சிலிக்கா என்ற கனிமம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது இணைப்பு திசுக்களை வலுப்படுத்தி உடனடி பளபளப்பை வழங்குகிறது.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.