ஆரோக்கியத்தை கெடுக்கும் இஞ்சி

';

அதிக இஞ்சி நுகர்வு

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இஞ்சியே அதை கெடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவே மருந்து என்றால், அதுவே அதிகமானால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது

';

அருமருந்து இஞ்சி

பருவகால மாற்றங்களினால்ஒவ்வாமை மற்றும் நோய்கள் ஏற்படும்போது அருமருந்தாக செயல்படுகிறது இஞ்சி. இஞ்சியை தேநீரில் போட்டு குடித்தாலும் சரி, கசாயமாக வைத்துக் குடித்தாலும் சரி, ஆரோக்கியம் மேம்படும்

';

எதிர்மறையாய் மாறும் நன்மைகள்

ஆனால், இஞ்சியை அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தினால், அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்

';

இஞ்சி: பக்க விளைவுகள்

உணவுக்குப் பிறகு சிறிதளவு இஞ்சியை உட்கொள்வது வாயுவைக் குறைக்கும், ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து நெஞ்செரிச்சல், வாயு, மலச்சிக்கல் என பல பிரச்சனைகளை கொண்டு வரும்

';

ரத்தத்தை மெலிதாக்கும் இஞ்சி

இஞ்சியை அதிகமாக உட்கொள்வது இரத்த உறைதலை பாதிக்கலாம். இது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தும்

';

நோயாளிகளுக்கு எச்சரிக்கை

நோயாளிகள், தங்கள் உணவில் இஞ்சியைச் சேர்ப்பதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது

';

நீரிழிவு நோயாளிகள்

உணவில் அதிகப்படியான இஞ்சியைச் சேர்ப்பது இன்சுலின் அளவைத் தடுக்கலாம் மற்றும் சர்க்கரை அளவு திடீரென குறைவதற்கு வழிவகுக்கும். எனவே, இஞ்சியை அளவுடன் சேர்க்கவும்

';

எரிச்சல் உணர்வு

இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு வாயில் எரிச்சல் அல்லது எரியும் உணர்வை ஏற்படுத்தலாம்

';

பொறுப்பு துறப்பு

தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story