பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளராக இருந்தார் விஷ்னு.
ஆரம்பத்தில் இருந்தே வீட்டில் இருந்த அனைவருடனும் சண்டை போட்டு வந்தார் விஷ்னு.
பிக்பாஸ் டாஸ்கில் வென்று முதல் நபராக பைனலுக்கும் சென்றார்.
பிக்பாஸ் வீட்டில் பூர்ணிமா - விஷ்ணு இடையே காதலா என்ற பேச்சு இடையில் எழுந்தது.
பிக்பாஸ் வீட்டில் இருவரும் பேசிக்கொள்ளும் விதமும் அதே போல் இருந்தது.
பிறகு பூர்ணிமாவை ஒரு டாஸ்கில் விஷ்னு கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.
பிறகு இருவருக்கும் இடையேயான பேச்சு வீட்டில் குறைய தொடங்கியது.
பூர்ணிமாவுடன் காதலா என்று விஷ்ணுவிடம் கேட்கப்பட்ட போது, "எங்களுக்குள் நல்ல bond இருந்தது. அவர் கேமராவுக்காக பல விஷயங்களை செய்தா" என்று கூறியுள்ளார்.
மேலும் " என்மேல் எதாவது பீலிங் இருக்கிறதா என்று நான் கேட்டேன், அதற்கு பூர்ணிமா எதுவுமே சொல்லவில்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டேன்" என விஷ்ணு கூறி உள்ளார்.