18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி: ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் ஜன., 8 முதல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2021, 02:50 PM IST
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி: ராதாகிருஷ்ணன்! title=

தமிழகத்தில் ஜன., 8 முதல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 13 ஆம் தேதி விநியோகிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் (Chennai) உள்ள தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்ப 33 லட்சம் ஊசிகள் தயார் நிலையில் உள்ளதாக ராதாகிருஷ்ணன் (Radhakrishnan) தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 6 லட்சம் முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகம் (Tamil Nadu) முழுவதும் 45 இடங்களில் தடுப்பூசி மருந்தை இருப்பு வைப்பதற்கான கிடங்குகள் உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்.

ALSO READ | COVID-19 தடுப்பூசி உற்பத்தியாளரிடமிருந்து சாதாரண மக்களை எவ்வாறு சென்றடையும்?

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்., ஜன.,8 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) ஒத்திகை நடைபெறும். சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு மருத்து சேமித்து வைக்கப்படவுள்ளது. மொத்தம் 2 கோடி தடுப்பூசி பதப்படுத்தி வைக்கும் வசதி தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு (Central government) வழங்கிய அடுத்த நாளில் இருந்து தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயாராக உள்ளது. 

ஒரு நாளில் 100 பேர் வீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள் (Health workers), முன்களப் பணியாளர்கள், அதன்பிறகு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்" என அவர் கூறினார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News