மேஷம்: 
இன்று சிலருக்கு குழந்தைகளால் அவமானம் ஏற்படலாம். பொறியியல், தத்துவம், சமையற்கலை, திரைப்படம் சம்பந்தமாகப் படிப்போருக்கு சிறப்பான பலன்கள் கிட்டும். மேற்படிப்பு சம்பந்தமாக வெளியூர் சென்று தங்கி பயிலும் வாய்ப்பு கிட்டும். பெரியவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும்.    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
   
ரிஷபம்: 
இன்று குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். சுப நிகழ்ச்சிகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். தெய்வ நம்பிக்கையில் அனைத்தும் சுபமாக நிகழும். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். 


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9 
    
மிதுனம்:  
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். வெளியூர்  பயணம் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். 


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9


கடகம்: 
இன்று வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும்.   


அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9
   
சிம்மம்: 
இன்று குடும்பத்தில் சண்டைகள் அவ்வப்போது நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்கு  நல்ல வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் சேர்க்கை பெறுவர். மின்சாரப் பொருட்களை இயக்கும்போது கவனமுடன் நடந்து கொள்ளுங்கள்.  


அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5    


கன்னி: 
இன்று மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து போகும். அந்த நேரத்தில் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்துவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் நேரமிது. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். 


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3  
    
துலாம்: 
இன்று தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் 


ஈடேறும்.  
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9   


விருச்சிகம்: 
இன்று சொத்தில் பிரச்சனைகள் வரலாம். ஊர் விட்டு ஊர்களுக்குச் சென்று குடியேறும் நிலை வரலாம். பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படவும். பிரிந்து சென்ற சொந்தங்கள் ஒன்று கூடுவார்கள். பெண்களால் உயர்ந்த காரியம் நடக்கும். கடன் தொல்லை விலகும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6


தனுசு: 
இன்று அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.  


அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5
     
மகரம்: 
இன்று அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சனைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரம் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களை சேர்ப்பார். தந்தையின் செல்வாக்கால் வழக்கு வியாஜ்ஜியங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. 


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3
       
கும்பம்: 
இன்று பட்ட காலிலேயே படும் என்பது போன்ற நிலை மாறும். நீங்கள் செய்யாத தவறுக்கெல்லாம் மாட்டிக் கொண்டீர்களே, இனி நீங்கள் அதிலிருந்து தப்பிப்பீர்கள். கோர்ட், போலீஸ் என்றிருந்த நிலைமை மாறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும்.


அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7


மீனம்: 
இன்று நண்பர்களின் மீது கோபம் கொள்வதை தவிர்க்கவும். தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். அடுத்தவருக்கு சொல்லும் யோசனையை நீங்களும் கொஞ்சம் பயன்படுத்தி பாருங்களேன். அதீத கற்பனை கூடாது. அப்படியே கற்பனை செய்தாலும் மற்றவரிடம் சொல்லி மற்றவரை குழப்ப முயற்சிக்காதீர்கள். கலைஞர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவியும் காலம் இது.


அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9