27 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர் சேர்ந்து நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் "102 நாட் அவுட்". இந்த படத்தை உமேஷ் சுக்லா இயக்கி உள்ளார். படத்திற்கு கதை சௌமியா ஜோஷி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் கதைக்களம் ‘102 நாட் அவுட்’ என்ற குஜராத்தி காமெடி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் 75 வயதான மகனாக ரிஷி கபூரும், 102 வயதுடைய தந்தையாக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர்.


இதற்க்கு முன்பு அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர் சேர்ந்து "கபீ கபீ (1976), அமர் அக்பர் அந்தோனி (1977), நசீப் (1981), கூலி (1983) மற்றும் அஜூபா (1991) போன்ற மறக்கமுடியாத படங்களில் நடித்துள்ளனர். 


ஏற்கனவே, இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று 102 நாட் அவுட் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. 1 மணி 41 நிமிடம் ஓடக்கூடிய, இந்த படத்தை குறித்து பொது மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.