11-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூர கொலை!
சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் 11-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கால்வாயில் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ராய்பூர்: சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் 11-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கால்வாயில் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
சத்தீஷ்கர் மாநிலம் போதி என்னும் கிராமத்தில் நேற்று இரவு நடைப்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் இருந்து மாயமான 11-வயது சிறுமி, அப்பகுதிக்கு அருகில் இருக்கும் செங்கள் சூலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பலியான சிறுமியின் சகோதரருக்கு திருமணம் நடந்திருந்த வேலையில், மணமகனின் நண்பர் உத்தம் சாஹூ(24) சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அருகில் இருக்கும் செங்கள் சூலைக்கு கொண்டுச் சென்று வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்றுள்ளார். பின்னர் ஏதும் அறியாதவர் போல் திருமண நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
விழாவிற்கு பின்னர் தன் மகளை காணாத பெற்றோர் அவரை தேடியுள்ளனர். அப்போது அவர் அருகில் இருக்கும் செங்கள் சூலைக்கு பக்கத்தில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் பினமாக இருப்பது கண்டறியப்பட்டது. இறுதியாக சிறுமியை சாஹூ-வுடன் பார்த்ததாக சிலர் கூறியதன் பேரில் சாஹூ-வினை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். பின்னர் தனது குற்றத்தினை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்,
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.