காவிரி மேலாண்மை ஆணையம் உறுப்பிர்களாக 2 பேரின் பெயர்ளை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் கர்நாட்டக சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு இந்த விஷயத்தில் காலதாமதம் செய்து வந்தது.


பல இழுபறிக்கு பின்னர் கடைசியாக திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை ஒத்திவைத்தது. மேலும் வரைவு திட்டத்தை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 


பருவமழை தொடங்குவதற்குள்ளாக மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 


இந்த அரசிதழில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள், காவிரி வாரியத்தின் செயல்பாடு உள்ளிட்ட விவரம் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த அரசிதழ் நகலினை சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினராக திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் பெயரை பரிந்துரைத்து.