ஹரியானா மாநிலம் யமுனா நகரில், 40-வயது பெண் ஒருவர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவின் ரகுநாத் பூரி பகுதியின் யமுனா நகரைச் சேர்ந்தவர் பிங்கி. நேற்றிரவு தனவு வீட்டில் இவருக்கும் கமல் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கமல் தனது கைத்துப்பாக்கியால் பிங்கியை சுட்டுக் கொன்றுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக கமலை கைது செய்துள்ள காவல்துறையினர் தெரிவிக்கையில்... கமலும் பிங்கியும் முன்பே பரிட்சையமானவர்கள். கடந்த 6 மாத காலமாக நட்பில் இருந்துள்ளனர். நேற்றிரவு திடீரென இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கமல், பிங்கியை சுட்டுக் கொன்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.


பிங்கியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், தோட்டா துளைத்துச் சென்றுள்ளதால் அதிக அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.


இவர்களுள் வாக்குவாதம் ஏற்பட காரணம் என்ன, முன்விரோதம் ஏதேனும் உண்டா என்ற வகையில் இவ்வழக்கு தொடர்பகா விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.