புதுகட்டிட கூறை இடிந்து விபத்து, 6 பேர் படுகாயம்!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கட்டுமாண பணியில் இருக்கும் புதுக்கட்டிடம் ஒன்றின் கூறை இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்ட மக்கள் விபத்துக்குள்ளாகினர்!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கட்டுமாண பணியில் இருக்கும் புதுக்கட்டிடம் ஒன்றின் கூறை இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்ட மக்கள் விபத்துக்குள்ளாகினர்!
உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாராவின் சிக்கந்த்ராபாத் பகுதியில் கட்டுமாண பணியில் இருக்கும் புது கட்டிடம் ஒன்றின் கூறை இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் அக்கட்டிடத்தில் பணிபுரிந்து வந்த பணியாட்கள் விபத்தில் சிக்கினர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து அக்கட்டித்திற்கு அருகில் இருக்கும் மக்கள் காவல்துறையினருக்க தகவல் அளித்துள்ளனர். விஷயம் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீடபு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
விபத்திற்கான காரணம் குறித்த சரியான தகவல்கள் வெளியாகவில்லை, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!