ஸ்பெயின் விமானத்தில், இனரீதியான கருத்துக்களை தெரிவித்ததால் 70 வயது பயணி விமானத்தில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்பெயின் லா பால்மா-வில் இருந்து வடக்கு டெனிர்பியாவிற்கு செல்லும் Binter Canarias விமானம் ஒன்றில் பயணித்த 70 வயது விமானி ஒருவர் சக பயணியிடம் இன ரீதியான கருத்தினை தெரிவித்ததினால் விமானத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பினை ஏற்படத்தியுள்ளது.


ஸ்பெயின் செய்தி ஊடகமான EI பெய்ஸ் அறிக்கையின் படி, பயணத்திற்கு முன்னதாக விமானம் புறப்படும் தருவாயில் குற்றம்சாட்டப் பட்ட நபர் தன் அருகாமை சீட்டில் அமர்ந்திருந்த நபரினை பார்த்து "கருப்பின மக்கள் என்னை சுற்றி இருப்பதினை நான் விரும்புவதில்லை" என சர்ச்சைக்குறிய வகையில் கருத்தினை பதிவு செய்துள்ளார்.


பின்னர் இந்த சம்பவம் குறித்து அறிந்த விமானி, புறப்படும் முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவரை விமானத்தில் இருந்து கீழ் இறங்குமாறு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மறுத்த அவர் பின்னர் விமானத்தினை விட்ட வெளியேறினார். இந்த நிகழ்வால் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தெரிவிக்கையில், தங்களுக்கு பயணிகளின் ஆறுதலே முக்கியம். சக பயணியை அவரின் இனத்தை குறித்து சயாட்ப்பது ஏற்க தக்கது அல்ல. குற்றம்சாட்டப் பட்டவர்மீது "இனவெறி வன்முறை" தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


இந்த சம்பவத்தின் வீடியோவினை சக பயணி ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்!