தமிழகத்தில் பொறியியல் படிப்பு பயில்வதற்காக இதுவரை சுமார் 84,400 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பொறியியல் பயில மீண்டும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீப காலமாக பொறியியல் படிப்பிற்கான ஆர்வம் தமிழக மாணவர்களிடம் குறைந்து வருகிறது என பேசப்பட்ட வந்த நிலையில் தற்போது மாணவர்களிடம் மீண்டும் பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாக தெரிகிறத. 


தமிழகத்தில் பொறியியல் பயில விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் சேர்க்கை கடந்த மே 3-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வரகிறது. விண்ணப்பிக்க துவங்கி 16 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 84,400 விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மட்டும் 10,338 விண்ணப்பங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேர பதிவை தொடங்கிவிட்டனர். CBSE 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவராததால் அவர்கள் இன்னும் பதிவை நிறைவு செய்யவில்லை.


ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவுசெய்ய மே 30-ஆம் நாள் வரை நேரம் இருப்பதினால், இந்த காலக்கட்டத்தினில் மேலும் பல்லாயிரம் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக, மாணவர்களின் விண்ணப்ப கட்டணத்தை DD-யாக ஏற்க வசதிகள் செய்யப் பட்டுள்ளதாகவும், மாவட்டம்தோறும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.