பிரபல மலையாள நடிகர் நீரஜ் மாதவ்-க்கு திருமணம் -Seepic!
பிரபல மலையாள நடிகர் நீரஜ் மாதவ்-க்கு இன்று திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது..!
மலையாள சினிமாவின் தனது நடிப்பால் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் பிரபல நடிகர் நீரஜ் மாதவ். இவரது படங்கள் திரிஷ்யம், ஒரு வடக்கன் செல்ஃபி, குஞ்சிராமாயணம், ஒரு மெக்சிகன் பிரணாயகதா, ஊழம் என பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் நீரஜ் மாதவ்-க்கும் கேரளா கோழிக்கோடை சேர்ந்த தீப்தி என்பவருக்கும் கடந்த மார்ச் 16-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவர்களின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள ஸ்ரீகண்டபுரம் கோவிலில் இருவரும் கேரள முறைப்படி பாரம்பரிய உடையில் நலங்கு வைத்து பெற்றோர்கள் உறவினர்கள் முன்நிலையில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமண புகைப்படங்கள் இதோ...!
Pic Courtesy : Neeraj Madhav (Facebook)....