தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து, விவசாய அமைப்புகள், பொது மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. 


இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர் சங்கம் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் மவுன விரதம் இருந்து வருகின்றனர்.


இந்த போராட்ட களத்துக்கு ரஜினி கலந்து கொள்வதற்கு முன்னர் சென்னையில் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது அவர் கூறுகையில், காவிரி போராட்டத்தை முன்னிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பது தான் பிரதமருக்கு நான் வைக்கும் கோரிக்கை என்றார்.


தொடர்ந்து அவர், ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது. அப்போதுதான் போராட்டம் தடைபடாமல் நடக்கும். போட்டியை நிறுத்த முடியாது என்றாலும் வீரர்கள் மக்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம்.


மேலும் ''ஐபிஎல் போட்டியில் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜுடன் ஆட வேண்டும். சென்னை மைதானத்தில் நடக்கும் போட்டியில் கருப்பு பேட்ஜுடன் ஆடலாம். ரசிகர்கள் கருப்பு கொடியுடன் களத்திற்கு செல்லலாம். இதன் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்'' என்றுள்ளார்.