காஷ்மீரில் சிறுமி கற்பழிப்பு குறித்து நான் வெட்கப்படுகிறேன்: நடிகை பார்வதி!!
காஷ்மீரில் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகை பார்வதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகை பார்வதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவர் தப்பிக்க உதவிய காவல் அதிகாரி உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2017ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் பட்டியல் நேற்று முன்தினம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இதில், டேக் ஆப் என்ற மலையாளப் படத்தில் நடித்த நடிகை பார்வதிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த விருது தனக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சி அளிக்க வில்லை என்று மலையாள நடிகை பார்வதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவர், தனது முகநூல் பக்கத்தில் வாசகங்கள் அடங்கிய அட்டை ஒன்றை வெளியிட்டு இருந்தார்!
அந்த அட்டையில் அவர் கூறியுள்ளதாவது:- நான் ஒரு இந்தியன். ஆகையால், நான் வெட்கப்படுகிறேன்.
கத்துவா பகுதியில் நடைபெற்ற 8 வயது சிறுமியின் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்துக்கு நீதி வேண்டும்.
மேலும், இந்த சம்பவத்தால் தான் வெட்கி தலைகுனிவதாகவும் நடிகை பார்வதி அதில் கூறியிருந்தார்.