முன்னாள் முதல்வர் ஜெ., அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் 86 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக கோவை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், தொண்டாமுத்தூரில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏழை குடும்பங்களை சேர்ந்த 86 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 


இத்திருமண நிகழ்ச்சியில் இந்து, இஸ்லாமியர், கிருத்தவ மதம் என அனைத்து மத ஜோடிகளும் திருமணம் செய்துக்கொண்டனர். இதனால் திருமனமானது அவரவர் திருமண முறைப்படி நடத்தப்பட்டது.



இதனையடுத்து தொண்டாமுத்தூர் மக்களுக்கு பவானி கூட்டுகுடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் உக்கடம் சந்திப்பில் இருந்து ஒப்பணக்கார வீதிவரை அமைக்கப்படவுள்ள ஆற்றுப்பாலம் அமைக்கும் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.