ஐதராபாத்: 6-வயது சிறுமியை பாலியல் ரீதியாக தூண்டியதாக கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவரை அத்தொகுதி MLA  சரமாரியாக தாக்கிய வீடியோ தற்போது இணைத்தில் பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத் மாநிலம் சந்தர்கட் காவல் நிலையத்தில் 6-வயது சிறுமியை பாலியல் ரீதியாக தூண்டியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அத்தொகுதியின் AIMIM கட்சி MLA அஹமெத் பிலால் தனது கட்சி உறுப்பினர்களுடன் சென்று காவல் நிலையத்திலேயே வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.



இந்த வீடியோவினை ANI செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. காவல் நிலையத்தில் காவலர்கள் முன்னிலையில் கைதியினை தாக்கிய சம்பவம் பொதுமக்கள் சட்டத்தினை கையில் எடுத்துள்ளது போல் அமைந்துள்ளதாக கருத்துகள் பரவி வருகின்றன.


முன்னதாக இதேப்போன்று சம்பவம் நடந்தேருகையில், பொதுமக்கள் சட்டத்தினை தங்கள் கையில் எடுத்ததாகவும் தெரிகிறது.