ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் 1000ஜிபி ப்ரீ டேட்டா திட்டததை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. 


1000ஜிபி இலவச டேட்டா திட்டத்தின் விவரம்.....!


கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டமான Big Byte Offer, 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இந்த சலுகை வாய்ப்பின் சிறப்பான பகுதி என்னவென்றால், குறிப்பிட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்ய கூடுதலாக 1000ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். மேலும் அந்த டேட்டாவை, அக்டோபர் மாத இறுதி வரை ரோல்-ஓவர் செய்யும் வசதியும் உண்டு. 


1000ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவின் வேகமானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திட்டத்தை பொறுத்தது.  ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டு வி- ஃபைபர் திட்டங்களான ரூ.1099/- மற்றும் ரூ.1299/- திட்டங்களும் 1000ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கும்.


இந்த வாய்ப்பைப் பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.airtel.in/broadband சென்று, குறிப்பிட்டுள்ள திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 


Big Byte Offer,  வழியாக கிடைக்கும் இந்த போனஸ் டேட்டா ஆனது, ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்பை ஆக்டிவேட் செய்த ஏழு நாட்களுக்கு பின்னரே கிடைக்கும்.