சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தெரிவித்துள்ளது. அதைக்குறித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அறிக்கையில் கூறியதாவது:-


திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-05-2018 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் "அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்" நடைபெறும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 


இந்த கூட்டத்தில் கர்நாடகா அரசியல் சூழ்நிலை குறித்தும், காவிரி விவகாரம் குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க்கப்படும் எனத் தெரிகிறது.