கடந்த 12 ஆம் தேதி கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

 

ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவியதால், கர்நாடகவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு காலை முதல் மக்களிடையே அதிகரித்தது.

 

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தாலும், நேரம் செல்ல செல்ல பாரதிய ஜனதா கட்சி 100-க்கு அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி பாஜக 120 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.


 

தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில், இதுக்குறித்து பாஜக கட்சியை சேர்ந்த சதானந்த கவுடா கூறியது, 

 

ஜே.டி.எஸ் உடனான கூட்டணி குறித்து ஆலோசனை செய்ய வேண்டியது இல்லை. ஏற்கனவே நாங்கள் 112 இடங்களுக்கு அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறோம். கூட்டணி குறித்து ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனக் கூறினார்.