இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா. இவர்கள் இருவரும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து இவர்கள் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். பின்னர் விராட் கிரிக்கெட்டிலும் அனுஷ்கா திரைப்படங்களிலும் பிஸியாகி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மா-வை RCB விளையாடும் போட்டிகளில் மட்டும் நிச்சயம் பார்க்கலாம். அவரது கணவர் கோலியை ஊக்குவிக்க அவர் தவறாமல் வருவதை வழக்கம்காகவும் வைத்துள்ளார் இவர். 


தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் வயதான பெண் போல அவருக்கு அலங்காரம் செய்துகொண்டிருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.எந்த முன்னணி நடிகையும் அவ்வளவு விரைவில் பாட்டி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தைரியமாக அப்படி ஒரு முயற்சியில் தைரியமாக இறங்கியுள்ளார்.


ஆனால் இவர் எந்த படத்திற்காக இப்படி செய்தார் என்பது பற்றி தகவல் ஏதும் இல்லை. ஒரு விளம்பர படத்திற்காக தான் அனுஷ்கா இப்படி மாறியுள்ளார் எனவும் செய்திகள் பரவுகிறது.


இதோ, அந்த புகைப்படம்...!