16:05 | 26-05-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2016 செப்.27ஆம் தேதி ஜெயலலிதா பேசிய 52 விநாடிகள் கொண்ட ஆடியோ பதிவு வெளியீடு! 


மூச்சுத்திணறலை உணர்ந்தது எப்படி என ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆடியோ பதிவை மருத்துவர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் தாக்கல்! 



அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியீடு! 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்! 


அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராகுமாறு அனுப்பி விட்டனர். ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள்.


இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்- யார் பார்த்தார்கள். அங்கு யார் கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடந்தது என்பது உள்பட பல்வேறு தகவல்களுக்கு விளக்கங்கள் கேட்கப்பட்டன.


இந்த நிலையில் சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அவ்வப்போது பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது


ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவு பட்டியல் மூலம் இது தெரியவந்துள்ளது. அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியளை வெளியீடுள்ளது!


அதில், 2016 நவம்பர் 22-ம் தேதி மதியம் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகிய இனிப்பு பலகாரங்களை உட்கொண்டதும் தெரியவந்தது. 2016 டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் மில்க் ஷேக் வகைகளை ஜெயலலிதா உட்கொண்டார் என அறிக்கையில் தகவல் கூறபட்டு உள்ளது.