இதோ புதிய தோற்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்!
இதோ! மக்கள் நீதி மய்யம் தலைவரான கமலின் புதிய தோற்றம்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது புதிய தோற்றத்தில் தன்னை மாறியிருக்கிறார். தேவர் மகன் விருமாண்டி விருமாண்டி ஸ்டைல் மீசையுடன் கமல்ஹாசன் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
கமல் அவருடைய கட்சி அலுவலகத்திற்கு புதிய தோற்றத்தில் வந்த போது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளார். கமல்ஹாசன் தற்போது புதிய படம் எதிலும் நடிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால், விஸ்வரூபம்-2 படத்தை மட்டுமே தற்போது முடுக்க உள்ளார்.
சபாஷ் நாயுடு படத்தை அவர் தொடர்வாரா இல்லையா என்பது பற்றிய எந்த விதமான தகவலும் தெரியவில்லை. இதியடுத்து, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தின் படத்தின் வேலைகள் ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது.
இருந்தாலும் கமல்ஹாசனின் இந்த புதிய மீசையுடனான தோற்றம் படத்திற்காகவா அல்லது சும்மா ஒரு மாற்றத்திற்காக வைத்திருக்கிறாரா என்பது நக்கலிடமும் சரி ரசிகர்களிடமும் சரி ஒரு குழப்பத்தில் உள்ளது.