ஆசிய நகரங்களிலேயே மிகவும் மளிவான நகரம் பெங்களூரூ தான் என ஓர் ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்மாத முற்பகுதியில் வெளியான Economist Intelligence Unit-ன் ஆய்வு அறிக்கையின் படி, உலக அளவில் வாழ்வதற்கான அத்தியாவச பொருட்களை பெற மளிவான நகரங்களின் பட்டியலினை வெளியிட்டுள்ளது. 


இந்த பட்டியலை தயாரிக்க சுமார் 400 க்கும் மேற்பட்ட நகரங்களை உலக அளவில் தேர்ந்தெடுத்து, அந்நகரங்களில் கிடைக்கும் அத்தியாவச பொருட்களின் விலையினை ஒப்பிட்டு மளிவு விலை நகரங்களின் பட்டியலினை வெளியிட்டுள்ளது. 


இந்த பட்டியலின் படி ஆசிய அளவில் பெங்களூரு மளிவு விலை நகரமாகவும், சிங்கபூர் விலைமதிப்பு மிக்க நகரமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேலையில் சிரியாவின் டமஸ்கஸ், வெனின்சுலாவின் கார்கஸ், கஜகஸ்தானின் அல்மட்டி மற்றம் நைஜீரீயாவின் லாகோஸ் நகரங்கள் பெங்களூருவை காட்டிலும் மளிவான நகரங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பட்டியலில் ஆசியாவின் 133 நகரங்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை, டெல்லி, மும்பை நகரங்களுக்கு முறையே 126, 124, 121-வது இடங்கள் கிடைத்துள்ளது.


இந்த ஆய்வின் முடிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடே மிகவும் மளிவான விலை பொருட்களை வாங்க ஏதுவான இடம் எனவும், அதே வேலியில் அதிக விலை பொருட்களை வாங்கவும் ஆசிய நாடுகளே முதலிடம் என தெரிவித்துள்ளது!