#BibleStories:ஞானத்தில் குறைபாடு உடையவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன்!
இன்றைய நாளில் உங்களில் ஞானத்தில் குறைபாடு உடையவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன் என்னும் வசனம் இடம் பெற்றுள்ள செய்திகளை பற்றி பார்போம்!!
பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய கதைகள், மக்களை நல்வழிபடுத்தும் நோக்கில் அமைந்துள்ளது!
இன்றைய நாளில் உங்களில் ஞானத்தில் குறைபாடு உடையவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன் என்னும் வசனம் இடம் பெற்றுள்ள செய்திகளை பற்றி பார்போம்!!
அதில், அவர் கூறும்போது..! விதைக்கிறவர் ஒருவர் தான் விதைக்கவேண்டிய விதைகளை எடுத்துக்கொண்டு வயலை நோக்கிச் செல்கின்றார். செல்லும் வழியில், கூடையிலிருந்து சில விதைகள் கீழே விழுந்து, பலரது கால்களிலும் மிதிபட்டுப்போயின. வேறு சில விதைகளைப் பறவைகள் இரையாக்கின. இன்னும் சில விதைகள் வேலியின் முள்புதர்களில் விழுந்து சிக்கி கொண்டனர்.
வேறு சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை நல்ல முறையில் விளைந்து, அவை நூறு, ஆயிரம், பதினாயிரம் என பல்கிப்பெருகி பலன்தந்தன.
இந்தக் கதையின் மூலம் தேவனுடைய வசனங்கள் கூறப்படும் உவமைகளாவன..!
வழியிலேயே விழுந்த விதைகள், தேவனுடைய வசனங்களைக் கேட்கின்ற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால், அவர்கள் தங்கள் காதுகளுக்கு கேட்டாலும் அதனை மனதுக்கு அருகே கொண்டு செல்ல மாட்டார்கள்.
பாறை இடுக்குகளில் விழுந்த விதைகள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கொஞ்ச நாள்கள் அதன்படி பின்பற்றுவர்கள், பிறகு சில காலம் கழித்து தங்களின் சுபாவத்துக்கு மாறிவிடுவார்கள்.
முள்புதர்களுக்கு நடுவே விழுந்த விதைகள், தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டும், உலகப்பூர்வமான விஷயங்களான செல்வம், ஆடம்பர வாழ்க்கை, சுயநலம் ஆகியவற்றில் சிக்கி இருப்பவர்களாவார்கள்.
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள், கர்த்தரின் வார்த்தைகளை தூய்மையான இதயத்துடன் கேட்கும் மனிதர்களுக்கு ஒப்பானவையாக இருக்கின்றன. அவர்கள் வசனத்தை கேட்பதுடன் அவற்றின் படி பின்பற்றுவதுடன், மற்றவர்களுக்கும் கூறி மகிழ்வார்கள்.