Bigg Boss 2-இரண்டாம் டீசரின் டப்பிங் புகைப்படம்! உள்ளே பார்க்க!!
Bigg Boss 2-வின் இரண்டாம் டீசரின் டப்பிங் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!
கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பெரும் வரவரப்பினை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசீசனையும் நடிகர் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியின் டீஸரினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டிருந்தார்.
இந்த டீஸர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, இதன் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.
இதையடுத்து, Bigg Boss 2- வின் முதல் போட்டியாளராக காமடி நடிகர் 'பவர் ஸ்டார்'' தேர்வு செய்யப்பட்டதையடுத்து, பல பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வருகிற ஜூன் இரண்டாம் வாரம் Bigg Boss 2- நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளதால் அதன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக டப்பிங் வேலைகளை கமல்ஹாசன் அண்மையில் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விரைவில் இதன் இன்னொரு டீசர் வெளிவர இருக்கிறதாம்.
இது தொர்பான புகைப்படத்தை கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட்டுள்ளார்.