ராகுலின் பேச்சு அர்தமற்றது - நிர்மலா சீத்தாராமன் பதிலடி!
ராகுலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
புதுடெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாட்டில் இன்று பேசிய ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசினை கடுமைகா விமர்சித்தார்.
ரபேல் போர் விமான ஊழல், PNB மோசடி, பொருளாதார நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை என அனைத்து விவகாரங்களில் ஆளும் பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தியின் உறைக்கு பதில் அளித்த நிர்மலா சித்தாராமன் தெரிவித்ததாவது...
"காங்கிரஸ் கட்சி எப்போது நீதி-யின் பாதுகாவலராக மாறியது? தனக்கு எதிராக நீதி சென்றதும் இந்திரா காந்தி என்ன செய்தார் என்பதினை நினைவுபடுத்தியாக வேண்டும்.
1988-ம் ஆண்டு பிரஸ் மசோதா கொண்டுவரப்பட்ட போது ஊடகங்களுக்கு எதிராக எத்தனை வழக்குகள் போடப்பட்டது. இந்திரா காந்தி ஊடகங்கள் முழுவதையும் நசுக்கிவிடவில்லையா? இப்போது அவருடைய பேரன் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து பேசுவது வேடிக்கையாக இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தேர்தல் நேரம் என்பதால் விவசாயிகள் நெருக்கடி தொடர்பாக ராகுல் காந்தி பேசுகிறார் எனவும். பல ஆண்டுகளாக அமைதி காத்து தற்போது குரல் கொடுப்பது விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக வாக்கை சேகரிக்கும் யுக்தி என தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் வளர்ச்சி பாதையில் தான் செல்கிறது. பாஐக ஆளும் மாநிலங்களை மேற்கோள் காட்டும் காங்கிரஸ், தாங்கள் ஆளும் கர்நாடகாவின் நிலைபாடு குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். இவையனைத்தும் அர்தமற்ற பேச்சாகவே தான் இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.