ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு: 25 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் காபூலில் இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி. மேலும், 45-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காபூலில் இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி. மேலும், 45-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள ஷாஸ்தாரக் அடுத்தடுத்து இரட்டை தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 45-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் மூன்று பத்திரிகை நிருபர்களும், ஒரு புகைப்பட நிருபரும் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலானது பத்திரிக்கையாளர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் சிலர் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டவர்களின் நிலையானது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே அடுத்த தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேலும், உயிர்பலியின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணப்படுகிறது.