நாடுமுழுவதும் இன்று புத்த பூர்ணிமா நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பௌத்தமதத்தினர் வெண்ணிற அணிந்து புத்த விகாரங்களுக்கு மலர்களை தூவி வழிபட்டனர்வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. வைகாசி பௌர்ணமியன்று உலகிற்கே அமைதியை போதித்த கௌதம புத்தர் அவதரித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. கபிலவஸ்துவின் மன்னனின் மகனான சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். தனது 29வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார். 


கௌதமபுத்தரான சித்தார்த்தன் கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அந்நாள் முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார். 


புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது. 


இந்நிலையில் இன்று புத்த பூர்ணிமா நாள் முன்னிட்டு இந்தியா மட்டுமல்லாது. நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புத்த பூர்ணிமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


கௌதம புத்தர் பிறந்து 2,500 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை இன்றும் வழி நடத்துகிறது. புத்த பூர்ணிமா நாளானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை நமக்கு நினைவு படுத்துகிறது. 


"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.